உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்., கட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

உடுமலை;உடுமலையில், காங்., கட்சியைக்கண்டித்து பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.காங்., கட்சி மூத்த தலைவர் சாம்பிட்ரோட்டோ, தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்ற நிறமுடையவர்கள் என பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன், பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகரத்தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வடுகநாதன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !