உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரத்த தானம், பொது மருத்துவ முகாம்

ரத்த தானம், பொது மருத்துவ முகாம்

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அணைப்புதுாரில் செயல்படும் ஏ.கே.ஆர். பள்ளியும், சிகரங்கள் அறக்கட்டளையும் இணைந்து 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரத்ததான முகாம், இலவச பொது மருத்துவ முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார்.ரேவதி மருத்துவமனையுடன் இணைந்து இருதயம், பொது மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை, பாலா எலும்பு மூட்டு மருத்துவமனையுடன் இணைந்து எலும்பு மற்றும் மூட்டு வலி பரிசோதனை முகாம் நடந்தது. 100 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ