உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொத்தடிமை - குழந்தை தொழிலாளர் இல்லை அரசு பணி ஒப்பந்ததாரரிடம் சான்று கட்டாயம்

கொத்தடிமை - குழந்தை தொழிலாளர் இல்லை அரசு பணி ஒப்பந்ததாரரிடம் சான்று கட்டாயம்

திருப்பூர்:தொழிலாளர் துறை உத்தரவுப்படி, ஊராட்சிகளில் நடந்த கிராம சபா கூட்டங்கள் வாயிலாக, குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பொங்கலுார், கரைப்புதுார், நஞ்சியம்பாளையம், கவுண்டச்சிப்புதுார், வீரணம்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சிகளில், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள், தங்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம், கொத்தடிமை தொழிலாளர் எவரும் இல்லை என்ற சுய சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.தொழிலாளர் உதவி கமிஷனர் ஜெயக்குமார் பேசுகையில், ''அரசு வாயிலாக அறிவிப்பு செய்யப்படும் ஒப்பந்த பத்திரத்தின், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த நிபந்தனைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும்,'' என்றார்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினவிழாவையொட்டி, நேற்று முன்தினம் நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். ஓட்டல்கள், உணவு நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள் என, மொத்தம், 88 இடங்களில் நடத்திய ஆய்வின் மூலம், 75 பேருக்கு விடுமுறை அளிக்காதது கண்டறியப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ