உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு சிறை

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு சிறை

திருப்பூர்;திருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீடு அருகே கடலுார் மாவட்டம், சின்ன சேமகோட்டையை சேர்ந்த ஆனந்த், 27 என்பவர் தங்கி பனியன் நிறுவனத்துக்கு சென்று வந்தார். கடந்த பிப்., 14ம் தேதி 2022ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த, 15 வயது சிறுமியிடம், வாலிபர் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், ஆனந்தை திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜாரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை