உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முட்டைக்கோஸ் கிலோ 50 ரூபாய் இதுவரை இல்லாத விலை உயர்வு

முட்டைக்கோஸ் கிலோ 50 ரூபாய் இதுவரை இல்லாத விலை உயர்வு

திருப்பூர்;திருப்பூர் மார்க்கெட்டில் முட்டைக்கோஸ் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ள நிலையில், இதற்கும் வெயில் தான் காரணம் என்கின்றனர், வியாபாரிகள்.வழக்கமாக முட்டைகோஸ் கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்கும். சீசன், விற்பனை அதிகமாகும் நேரங்களில், 25 முதல், 30 ரூபாய் விற்கப்படும். மொத்தமாக வாங்கி செல்வோருக்கு மூன்று கிலோ, 60, ஐந்து கிலோ, 100 ரூபாய் என வியாபாரிகள் விற்பனை செய்வர். ஆனால், கடந்த ஒரு வாரமாக முட்டைகோஸ் கிலோ, 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.வியாபாரிகள் சிலர் கூறியதாவது: முட்டைக்கோஸ் மூட்டைகளாக வரும்; மூட்டையுடன் தான் இருப்பு வைக்க முடியும். அவ்வப்போது விற்பனைக்கு ஏற்ப தோலை உரித்து விற்பனை செய்வோம். இரவு, அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் இருப்பதால், இருப்பு வைத்திருக்கும் கோஸ் நீர்விடும்; அழுகும் சூழல் உருவாகும்.நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது என்பதால், ஓரிரு நாளில் விற்று தீர்க்க பார்ப்போம். ஆனால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், முட்டைக்கோஸ் நீர்விடுவது குறைந்து விட்டது. தோலுரித்து விற்க வேண்டிய நிலை இல்லை. இதனால் உடனுக்குடன் விற்க வேண்டிய அவசரமில்லை.தாளவாடி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், முட்டைக்கோஸ் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. வரத்து குறைவால், விலை உயர்ந்துள்ளது. ஆனால், முட்டைக்கோஸ் விலை கிலோ, 50 ரூபாய்க்கு விற்பதே கஷ்டம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை