உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: கல்பனா சாவ்லா விருது, சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளது. வீரதீர செயல்களில் ஈடுபட்டோர், ஏதேனும் துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த பெண்கள், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://award.tn.gov.inஎன்கிற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். தகுதியுள்ளோர், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் சமூக நல அலுவலகத்தில், வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி