உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுகாதார சீர்கேடு களையப்படுமா?

சுகாதார சீர்கேடு களையப்படுமா?

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு நிர்வாகி ரஹீம் அங்குராஜ், அவரிடம் அளித்த மனு:கணியாம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கடந்த, ஏழு ஆண்டாக மாணவர் சேர்க்கை இல்லை. பள்ளியில் சுகாதாரமும் போதியளவில் பேணி பாதுகாக்கப்படுவதில்லை. ஊராட்சியில் ஆங்காங்கே பொதுமக்களால் கொட்டப்படும் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை; மாறாக, எரியூட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகைமாசு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ