உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கலுார் : இந்த ஆண்டு கோடை மழை குறித்த காலத்தில் பெய்யவில்லை. இதனால், கடும் வறட்சி நிலவியது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவித்தனர். பயிர்களுக்கு அடி உரமாக கொடுக்கும் கழிவுப் பஞ்சுகளை உணவாக கொடுத்து கால்நடைகளை காப்பாற்றி வந்தனர். இதனால், தீவனச் செலவு எகிறியது.பால் உற்பத்தியும் குறைந்தது. செலவு அதிகரித்து வருவாய் குறைந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.காலம் கடந்து சமீபத்தில் பெய்த கோடை மழையால் இயற்கையாக வளரும் கோரை, கொழுக்கட்டை, அருகு போன்ற புற்கள் நன்கு வளர்ந்துள்ளன. இதனால், தீவன பற்றாக்குறை நீங்கி வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை