உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் பாதுகாப்பு பள்ளியில் கொண்டாட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பள்ளியில் கொண்டாட்டம்

உடுமலை:கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் சிறப்பு வாரம் கொண்டாடப்பட்டது.சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நான்கு நாட்கள் சுற்றுச்சூழல் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.முதல் நாளில், மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகளை நட்டனர்.கழிவுகளை உரமாக்க உரக்குழிகளையும் அமைத்தனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.பள்ளி பகுதிகளில் உள்ள பழமையான மரங்களை பார்வையிட்டு, மாணவர்களுக்கு சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதி நாள் 'மரம் தன் வரலாறு கூறுதல்' தலைப்பில் மூன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை