உடுமலை : உடுமலை பள்ளி, கல்லுாரிகள், அரசு நிறுவனங்கள், பல்வேறு சங்கங்களிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.நாடு முழுவதும் 78 வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை ஒன்றியம் ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் தங்கவேல் தேசிய கொடி ஏற்றினார். உள்ளாட்சி பிரதிநிதி பாஸ்கரன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பொதுமக்கள், பெற்றோர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.* ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பேச்சியம்மாள், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி முதல்வர் மாலா வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் சுதந்திர தின விழா சிறப்பு உரை நிகழ்த்தினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்கள் தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து வந்தனர். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.* பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் குருசாமி கொடியேற்றினார். தலைமையாசிரியர் புனிதா வரவேற்றார். டாக்டர் சுந்தர்ராஜன் சுதந்திர தினம் குறித்து பேசினார். இதையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தேஜஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.* தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், சங்க அலுவலக கட்டடத்தில் சங்கத்தின் கவுரவத் தலைவர் நடராஜன் கொடியேற்றினார். சங்கத்தலைவர் மணி தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் சேர்ந்தனர். துணைத்தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.* உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நடந்த விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். ஆலோசகர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பரமேஸ்வரி கொடி ஏற்றினார். மாணவியர் தேச பக்தி பாடல்கள் பாடினர். மாணவியரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.மாணவ பேரவைத்தலைவி ஜேன் கிறிஸ்ஸி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி முன்மொழிந்தார். மாணவியர் அனைவரும் வழிமொழிந்தனர். மாணவர் பேரவை செயலாளர் அங்கிதாசுபஸ்ரீ கீதாஞ்சலியிலிருந்து கருத்துகளை கூறினார்.* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் கணேசன் கொடி ஏற்றினார். தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழாவையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சு, வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கினர். தமிழாசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.* ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் தாரணி கொடி ஏற்றினார். ஊராட்சி தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுவினர், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் விழாவில் பங்கேற்றனர். ஆசிரியர் கண்ணபிரான் நன்றி தெரிவித்தார்.* அமராவதிநகர் சைனிக் பள்ளியில் பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் கொடி ஏற்றினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.மாணவர்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் கவிதை வாசித்தனர். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள், பணியாளர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்றனர்.* கோமங்கலம் வித்ய நேத்ரா கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார். மாணவி காருண்யா சுதந்திர தின விழா உறுதிமொழி கூறினார். பள்ளியிலுள்ள 5 அணியினர் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். பள்ளி நிர்வாகத்தினர் மரக்கன்றுகளை நட்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், சர்வதேச பள்ளி முதல்வர் பிரான்ஸிலின்டோலி, ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.* உடுமலை இன்னர் வீல் சங்கத்தின் சார்பில் சத்திரம் வீதி நகராட்சி துவக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இன்னர் வீல் சங்க தலைவர் டாக்டர் ரமாதேவி, செயலாளர் கோதைநாயகி, பொருளாளர் ரேணுகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.* மேற்கு குமரலிங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தினர். விழாவில், பெற்றோர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.* விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் திலகாம்பாள் கொடி ஏற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். ஆசிரியர் மாலா, மாணவியர் கரிஷ்மா, நித்யஸ்ரீ சுதந்திர தினவிழா உரை நிகழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய மாணவர் படை முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜே.ஆர்.சி, சாரணர் இயக்கம், பசுமைப்படை சார்பில் மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் நர்மதா செய்திருந்தார்.* உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில், சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் நடந்தது. விழாவில், சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க அறக்கட்டளை தலைவர் நீலகண்டன் கொடி ஏற்றினார். நாயக் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ், பிரகாஷ் அணிவகுப்பு மரியாதை நடத்தினர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பொதுமக்கள், நேதாஜி மைதானத்தில் நடைபயிற்சி செய்வோரும் பங்கேற்றனர்.தொடர்ந்து சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகம், ருத்தரப்பநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, உடுமலை ஸ்டேட் பேங்க் வளாகம், உடுமலை இரண்டாம் கிளை நுாலகம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் ராணுவ சங்கத்தினர் கொடி ஏற்றினர்.நுாலகத்தில் நடந்த விழாவில் மகளிர் நுாலக வாசகர் வட்டத் தலைவர் விஜயலட்சுமி, வாசகர் வட்ட உறுப்பினர் ராமதாஸ், நுாலகர் பிரமோத் பங்கேற்றனர்.சுதந்திரதினத்தையொட்டி உடுமலையைச் சேர்ந்த ஓவியர் கனிமொழி, 78 சுதந்திர வீரர்களின் உருவ படங்களை வரைந்து நேதாஜி மைதானத்தில் காட்சிப்படுத்தினர்.* பாலப்பம்பட்டி சமத்துவபுரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், சமத்துவபுர அரசு துவக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, பாட்டுப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.* சின்னகுமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சகாயரத்தினம், ஊராட்சித்தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பாத்தாள் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களின் பேச்சு, நடனம், யோகா பயிற்சிகள் நடந்தன. மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் கோவிந்தராஜ் நன்றி தெரிவித்தார். விழாவில் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.* குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமையாசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சங்கராமநல்லுார் பேரூராட்சித்தலைவர் மல்லிகை கொடி ஏற்றினார். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள், பெற்றோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.* குருவப்பநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சு,கட்டுரை, பாட்டுப்போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.* திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரியில் நடந்த விழாவில் கல்லுாரி பொறுப்பு முதல்வர் சண்முகப்ரியா வரவேற்றார். செயலாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாணவர்களின் சிலம்பம், தற்காப்பு கலை யோகாசனங்கள், பேச்சு, பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. குருமகான் பரஞ்ஜோதியார் நாட்டின் வளர்ச்சி குறித்து பேசினார். விழாவில் உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர்கள், கல்லுாரி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.பேராசிரியர் சிவசுப்ரமணியம் நன்றி தெரிவித்தார்.* உடுமலை மாரியம்மன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்களில், சுதந்திர தினத்தையொட்டி, பொதுவிருந்து நிகழ்ச்சி நடந்தது.