உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் இயக்கம் மாற்றம்

ரயில் இயக்கம் மாற்றம்

ஈரோடு - ஊத்துக்குளி - திருப்பூர் மார்க்கத்தில் தண்டவாள மேம்பாடு, பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், திருச்சி - பாலக்காடு டவுன் (எண்:16843) ஜூன், 28 மற்றும், 30ம் தேதி ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். மதியம், 1:00 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, மாலை, 3:45 மணிக்கு ஈரோடு வரும்.வழக்கமாக பயணிக்கும் ரயில் பயணிகள் வசதிக்காக, இரண்டு நாட்களும், ஈரோட்டில் இருந்து பாலக்காடு வரை சிறப்பு ரயில் இயக்கப்படும்; இந்த ரயில், மாலை, 5:00 மணிக்கு ஈரோட்டில் புறப்படும்.தவிர்க்க இயலாத காரணங்களால், சென்னை - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:06043) வரும் ஜூலை, 3ம் தேதி வரையும், தாம்பரம் - மங்களூரு சிறப்பு ரயில் (எண்:06047) ஜூன், 30 வரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை