உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கம்பத்தை மாத்தியாச்சு... கம்பியை எப்போ மாத்தறது!

கம்பத்தை மாத்தியாச்சு... கம்பியை எப்போ மாத்தறது!

திருப்பூர்;திருப்பூரில் ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம் அருகே புதிய மின் கம்பம் நடப்பட்டது. ஆனால், அதில் மின் கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 32வது வார்டு கருணாகரபுரியிலுள்ள பகவதியம்மன் நகரில் ரோட்டோரம் மின் கம்பம் உள்ளது. அப்பகுதி கட்டடங்களுக்கு மின் இணைப்புகளும் இந்த கம்பத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.இந்த கம்பம் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், ரோட்டில் செல்வோருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்தது. இதை மாற்றிப் பொருத்துமாறு அப்பகுதியினர் பல மாதங்களாக மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக புதிய கம்பம் பதிக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும், பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தில் உள்ள தெரு விளக்கு மற்றும் மின் இணைப்புகள் புதிய கம்பத்துக்கு மாற்றும் பணி இது வரை நடக்கவில்லை.ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பமும் அகற்றப்படவில்லை. பெயரளவுக்கு மட்டும் மின் கம்பத்தை கொண்டு வந்து பதித்த அதிகாரிகள், பழைய மின் கம்பத்தை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ