உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்ச் தேர்த்திருவிழா

சர்ச் தேர்த்திருவிழா

திருப்பூர், குமார் நகர் புனித சூசையப்பர் சர்ச் தேர்த்திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 1ம் தேதி, ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை அருட்சாதனம் வழங்கும் நிகழ்ச்சிகள், கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் தலைமையில் நடந்தது. மறைமாவட்ட முதன்மை குரு அருண் தலைமையில், தேர்த்திருவிழாவும், கூட்டு பாடல் திருப்பலியும், தேர்பவனி, நற்கருணை ஆசிர் நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு, திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகள், கோவை சி.எம்.எஸ்.எஸ்.எஸ்., இயக்குனர் ஆண்டனி செல்வராஜ் வழிகாட்டுதலுடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை