உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை - திருப்பதி ரயில் சாமல்பட்டியில் நிற்கும் !

கோவை - திருப்பதி ரயில் சாமல்பட்டியில் நிற்கும் !

திருப்பூர்:'கோவை - திருப்பதி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி, சாமல்பட்டியில் நிற்கும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22616) இயக்கப்படுகிறது. காலை, 6:10 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில் மதியம், 1:20 மணிக்கு திருப்பதி சென்று, மதியம், 3:00 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு இரவு, 10:50 மணிக்கு கோவை வந்தடைகிறது.வரும், 21ம் தேதி முதல் இந்த ரயில் சேலம் - ஜோலார்பேட்டை இடையே உள்ள சாமல்பட்டி ஸ்டேஷனில் ஒரு நிமிடம் (காலை, 9:38 மணிக்கு) நின்று செல்லும். மறுமார்க்கமாக, வரும், 22ம் தேதி முதல், திருப்பதியில் இருந்து கோவைக்கு ரயில் வரும் போது, மாலை 6:35 மணிக்கு சாமல்பட்டி ஸ்டேஷனில் நின்று, பயணிக்கும்.நிறுத்தம் ஏன்?கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது சாமல்பட்டி. கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ஸ்டேஷனில் நின்று செல்கிறது. இப்பகுதியில் இருந்து கோவை மற்றும் திருப்பூருக்குக்கு வேலை வாய்ப்பு, கல்வி தேடி பலர் வந்து, திரும்புவதால், திருப்பதி - கோவை ரயில் நின்று செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ