உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா கல்வெட்டு மீண்டும் அதேயிடத்தில் வைக்க எதிர்பார்ப்பு

கலெக்டர் ஆபீஸ் திறப்பு விழா கல்வெட்டு மீண்டும் அதேயிடத்தில் வைக்க எதிர்பார்ப்பு

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வரலாறு கூறும் கல்வெட்டுக்களை, பாதுகாப்பாக வைக்கவேண்டும்; வர்ணம் பூசும் பணிகள் முடிந்தபின், அதே இடத்தில் வைக்க வேண்டும்.திருப்பூர் மாவட்டம் கடந்த, 2008ல் உதயமானது. துவக்கத்தில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வாடகைக்கு இயங்கியது. திருப்பூர் - பல்லடம் ரோட்டில், எல்.ஆர்.ஜி., கல்லுாரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2012, அக்., 12ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெ., கலெக்டர் அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினார். தரைதளத்துடன் மொத்தம் ஏழு தளங்களுடன் ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. முதல்வராக இருந்த ஜெ., கடந்த 2015, டிச., 28ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக கட்டடத்தை திறந்து வைத்தார். இதற்கான கல்வெட்டு, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளுடன், கலெக்டர் அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது.கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில், கிரானைட் கற்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நுழைவாயிலின் தென்புறம் அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டும்; வட புறம் திறப்பு விழா கல்வெட்டும் பதிக்கப்பட்டிருந்தன.அ.தி.மு.க., காலத்தில் கட்டப்பட்டது என்பதால், கலெக்டர் அலுவலக கட்டடத்துக்கு பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. தற்போது இந்த கட்டம், ஊதா மற்றும் வெள்ளை நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.வர்ணம் பூசுதல் உள்ளிட்ட சீரமைப்பு பணியின் ஒருபகுதியாக, முகப்பு பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கள் முழுவதும் பெயர்த் தெடுக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்நிலையில், முகப்பு பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த, அடிக்கல் நாட்டுவிழா மற்றும் திறப்பு விழா கல்வெட்டுக்களும் அகற்றப்பட்டு, ஓர் ஓரமாக போட்டுவைத்துள்ளனர்.கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் மாயமாகவோ, உடைந்துபோக வாய்ப்பு உள்ளது. கல்வெட்டுக்களை பாதுகாப்பன இடத்தில் வைக்கவேண்டும். வர்ணம் பூசும் பணிகள் முடிந்தபின், இரண்டு கல்வெட்டுக்களையும், முகப்பு பகுதியில், தவறாமல் பொறிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. ------------------------------திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முன்னாள் முதல்வர் ஜெ., திறந்து வைத்த தகவல் அடங்கிய கல்வெட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு ஒரு ஓரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ