உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் பிரச்னையில் இரு தரப்பு மோதல்

கோவில் பிரச்னையில் இரு தரப்பு மோதல்

உடுமலை:உடுமலை அருகே, கோவில் பிரச்னையில் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், ஒரு தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், திருமூர்த்தி அணையின் பின் பகுதியில், ஜக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில், யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.ஒரு தரப்பினர், திருமூர்த்தி அணைக்கு நிலம் எடுக்கப்பட்டபோது, வழிபாட்டில் இருந்த கோவில் அகற்றப்பட்டதால், சிலை எடுத்து வைத்து வழிபட்டு வருவதாக தெரிவித்தனர்.மற்றொரு தரப்பினர், அனைத்து சமூகத்தினருக்கும் உரிய கோவில் என தெரிவித்தனர். இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டதால், நேற்று காலை, தாசில்தார் சுந்தரம் தலைமையில் சமாதான பேச்சு நடந்தது.இதில், இரு தரப்பினருக்கும் சுமூகமான தீர்வு ஏற்படாத நிலையில், ஒரு தரப்பினர் அதிருப்தியடைந்தனர்.உடுமலை - தளி ரோட்டில், தாலுகா அலுவலக ரோடு சந்திப்பு பகுதியில் திடீர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி இன்று காலை, கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என, உறுதியளித்தனர். இதனையடுத்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வந்த மறியல் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ