உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய போட்டியில் வெற்றி மாணவருக்கு பாராட்டு 

தேசிய போட்டியில் வெற்றி மாணவருக்கு பாராட்டு 

திருப்பூர் : சென்னை, உடற்கல்வி மற்றும் பயிற்சி பல்கலையில், மே, 3 முதல், 5 வரை மூன்று நாட்கள், மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான கிக்பாக்சிங் போட்டி நடந்தது.'பாயின்ட் பைட்டிங்' முறையில் நடந்த போட்டியில், திருப்பூர், பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர் மவுனீஸ் முதலிடம், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சிவகிரித்திஷ், ஹரிபிரசாத், 2வது இடம், விக்னேஸ்வரர், 3வது இடம் பெற்று பெருமை சேர்த்தனர். மாநில போட்டியில் முதலிடம் பெற்றதன் மூலம், மவுனீஸ் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் அரவிந்த், பயிற்சியாளர் முரளி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை