உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடை மழையை நம்பி வைகாசி பட்ட சாகுபடி

கோடை மழையை நம்பி வைகாசி பட்ட சாகுபடி

பொங்கலுார்;இன்னும் இரண்டு வாரங்களில் வைகாசி பட்டம் துவங்க உள்ளது.திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பி.ஏ.பி., தண்ணீர் இரண்டு சுற்றுகளுடன் முடிந்துவிட்டது. இருக்கின்றன தண்ணீர் தென்னை, மா, வாழை போன்ற மரப்பயிர்களுக்கே போதுமானதாக இல்லை. இதனால், தக்காளி, வெங்காயம், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடி செய்வது கேள்விக்குறியாக மாறி உள்ளது.விவசாயிகள் சிலர் கூறியதாவது: கோடை மழை பெய்திருந்தால், கோடை உழவு செய்து, தொழு உரங்களைப் பரப்பி நிலத்தை தயார்படுத்தி இருப்போம். மழையின்மையால் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு மரப்பயிர் சாகுபடி செய்துள்ளோம்.இவற்றிற்குப் போக மீதம் உள்ள தண்ணீரில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பல இடங்களில் போர்வெல் கிணறுகள் வற்றி குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, பெரும்பாலானோர் வைகாசி பட்ட சாகுபடியை தவிர்க்கும் முடிவில் உள்ளனர். கோடை மழை கொட்டித் தீர்த்தால் மட்டுமே வைகாசி பட்ட சாகுபடி முழு வீச்சில் துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை