உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம்

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம்

திருப்பூர் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களின் நன்னோக்கம் என்றும் மாறாதது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை மையத்துக்கு நிதி திரட்டும் வகையில் திருப்பூரில் நேற்று சைக்கிள் பயணம் நடந்தது.திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரியில் புற்று நோய்க்கான சிகிச்சை பிரிவு 'நமக்கு நாமே' திட்டத்தில் 90 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரோட்டரி திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை துவங்கப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அறக்கட்டளை சார்பில் சிகிச்சை மையத்துக்கான நிதி திரட்டும் வகையிலும், புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நேற்று திருப்பூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மக்கள் நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் தலைமை வகித்தார். அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் துவங்கியது. மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன் இதை துவக்கி வைத்தார்.அறக்கட்டளை நிர்வாகிகள், தன்னார்வலர்கள், ரோட்டரி அமைப்பினர் கலந்து கொண்டனர். மத்திய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், நஞ்சப்பா பள்ளி மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து, துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.முக்கிய ரோடுகள் வழியாக இந்த சைக்கிள் பயணம் பழங்கரை பகுதில் உள்ள எஸ்.கே.எல்., பள்ளியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து எஸ்.கே.எல். பள்ளி வளாகத்தில் பல்வேறு பிரிவினர் பங்கேற்ற விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி