உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிலம்பம் போட்டி; கதிரவன் அசத்தல்

சிலம்பம் போட்டி; கதிரவன் அசத்தல்

திருப்பூர் : மாநில அளவிலான தற்காப்புக்கலை சிலம்பம் போட்டி சசூரி பள்ளியில் நட்தது. இதில் மங்கலம் கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இளையோர் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவன் சச்சின் தங்கப்பதக்கம்; ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் அஜய் பிரதாப் சிங் ஒற்றைக்கம்பு விளையாட்டு, நிஷாந்த் தொடுமுறையில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்மூத்தோர் பிரிவு தொடுமுறைப் போட்டியில் வைஷ்ணவி தங்கப்பதக்கம், ஹரிணி வெள்ளிப்பதக்கம் பெற்றனர். மிக மூத்தோர் தொடுமுறைப் போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆதர்ஷ் தங்கப்பதக்கம், ஹரிஹரன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். மாணவர்களை பள்ளிச்செயலாளர், தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை