உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகள் டிசி; தாய் தர்ணா

மகள் டிசி; தாய் தர்ணா

திருப்பூர் : திருமுருகன்பூண்டி, லட்சுமியம்மாள் நகரைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர், தனது மகள் மற்றும் உறவினர்களுடன், நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.அவர் கூறியதாவது:ஒற்றை பெற்றோராக எனது இரு மகள்களையும் படிக்கவைத்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளை, குடும்ப சூழல் காரணமாக, அரசு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளேன். பள்ளி கட்டணம் செலுத்தமுடியாததால், தனியார் பள்ளி நிர்வாகம், மகளின் மாற்று சான்றிதழ் தர மறுக்கிறது. தனியார் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை பெற்றுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து, தர்ணாவை கைவிட்ட மகாலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்று, மனு கொடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை