உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோட்டில் கழிவு நீர் குளம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்

பிரதான ரோட்டில் கழிவு நீர் குளம் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலை;பிரதான ரோட்டில் குப்பை, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ளதை கண்டு கொள்ளாத கணியூர் மற்றும் ஜோத்தம்பட்டி உள்ளாட்சி அமைப்புகளைக்கண்டித்து, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகா, ஜோத்தம்பட்டி ஊராட்சியில் சேகரமாகவும் குப்பை, கழிவுகளை, பிரதான போக்குவரத்து ரோடாக உள்ள, மடத்துக்குளம் - தாராபுரம் ரோட்டில் கொட்டப்பட்டு வருகிறது.மேலும், சாக்கடை கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில், சாக்கடை கால்வாய் கட்டமைப்புகளை உருவாக்காமல், பிரதான ரோட்டில், பொது மயானம் அருகே, குளம் போல் தேங்கி, துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.இதனால், பள்ளி மாணவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள் பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.திட, திரவ கழிவு மேலாண்மை குறித்து ஜோத்தம்பட்டி, கணியூர் பேரூராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததைக்கண்டித்து, பா.ஜ., சார்பில், கணியூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றியத்தலைவர் யுவன் மணியன் தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர் கணேசன், பொருளாளர் பிரகாசம், துணைத்தலைவர்கள் செந்தில் குமார், கருப்புச்சாமி, பங்காரு, குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை