உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட சதுரங்கம் 253 பேர் பங்கேற்பு

மாவட்ட சதுரங்கம் 253 பேர் பங்கேற்பு

திருப்பூர்:மாவட்ட சதுரங்க அசோசியேஷன், பாரதி செஸ் அகாடமி சார்பில், சசூரி டிராபிக்கான மாவட்ட சதுரங்க போட்டி,திருப்பூர், மண்ணரை, சசூரி கல்லுாரியில் நேற்று நடந்தது.ஒன்பது, 12, 15 மற்றும் பொதுப்பிரிவில், மாவட்டம் முழுதும் இருந்து, 253 பேர், பங்கேற்று, விளையாடினர்.முன்னதாக, கல்லுாரி முதல்வர் மகாலட்சுமி போட்டிகளை துவக்கி வைத்தார். பாரதிராஜா, கோபிகிருஷ்ணன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் மாணவ, மாணவியருக்கான போட்டிகளை ஒருங் கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !