உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கடன் இலக்கு; ரூ.39,018 கோடி நிர்ணயம்

மாவட்ட கடன் இலக்கு; ரூ.39,018 கோடி நிர்ணயம்

திருப்பூர் மாவட்டத்தில், 39 ஆயிரத்து 18 கோடி ரூபாய்க்கு கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், ஆண்டுதோறும், ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடுவது போன்று, 2024-2025ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், கடன் திட்ட அறிக்கையை, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து, நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கை எட்ட வேண்டும்.2024 - 2025ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு, 39 ஆயிரத்து 18 கோடி. இதில் வேளாண் துறைக்கு, 16 ஆயிரத்து 829 கோடி, சிறு வணிகத்துறைக்கு, 21 ஆயிரத்து 344 கோடி, பிற முன்னுரிமை கடன்களான, வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக்திக்கடன், கல்வி கடன்களுக்காக, 396.02 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கல்விக்கடனுக்கென சிறப்பு முகாம் நடத்தி, விண்ணப்பங்களை பரிசீலித்து, மாணவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், முதன்மை மேலாளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.-- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை