உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட வாலிபால் போட்டி; ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி அசத்தல் 

மாவட்ட வாலிபால் போட்டி; ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி அசத்தல் 

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயோன மாவட்ட வாலிபால் போட்டி வித்ய விகாசினி பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது.இதில், மிக மூத்தோர் மாணவர் பிரிவில் ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்ய விகாசினி பள்ளி அணியை வென்று, முதலிடம் பெற்று கோப்பையை கைப்பற்றியது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான கோப்பையை பிளஸ் 1 மாணவர் அபிேஷக் வென்றார்.மாணவியர் மிக மூத்தோர் பிரிவில் ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், இளையோர் பிரிவில் மூன்றாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், ஊக்கப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் பாபின் ஆகியோரை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், பள்ளி ஒருங்கிணைப்பாளர், பள்ளி மேலாளர் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி