| ADDED : ஆக 19, 2024 12:18 AM
திருப்பூர்:மாநில அளவில் 100 பேருக்கும் குறையாத இளம் சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், ஒருங்கிணைந்த பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டு இதற்கான தேர்வு நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த போட்டியில், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, கட்சிக் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள் பங்கேற்றனர்.'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு பேச்சுப் போட்டியாக இது அறிவிக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டிருந்தது. தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார்.அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். தாயகம் கவி, செல்வேந்திரன், அன்பழகன், ஆண்டாள் பிரியதர்ஷினி, செந்தில்வேல், மில்டன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர். 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று பேசினர்.