உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போட்டோகிராபராக ஆசையா?

போட்டோகிராபராக ஆசையா?

அனுப்பர்பாளையத்தில், கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், இலவச போட்டோ கிராபி மற்றும் வீடியோ கிராபி முழு நேர பயற்சி வகுப்பு துவங்க உள்ளது. எழுத, படிக்கத்தெரிந்த, 18 வயது முதல் 48 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் இணையலாம். திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவராக இருக்கவேண்டும். கட்டணம் கிடையாது. மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். சுய தொழில் துவங்க, கடன்பெறுவதற்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. பயிற்சியில் இணைவதற்கான நேர்காணல், இன்று (3 ம் தேதி) நடைபெறுகிறது.கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில்மையம் எதிரில், அனுப்பர்பாளையம்புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர் என்கிற முகவரிக்கு நேரில் செல்லவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை. மேலும் விவரங்களுக்கு, 86105 33436, 99525 18441 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ