உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.20 கோடி வழங்கல் கேன்சர் சிகிச்சை மையத்துக்கு ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை திரட்டிய நிதி திருப்பூருக்கு ஏன் அவசியம்?

ரூ.20 கோடி வழங்கல் கேன்சர் சிகிச்சை மையத்துக்கு ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை திரட்டிய நிதி திருப்பூருக்கு ஏன் அவசியம்?

திருப்பூர்:திருப்பூரில், கேன்சர் சிகிச்சை மைய பணிக்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக, இதுவரை, 20 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டு, மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 'கேன்சர்' சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. 90 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ள இப்பணிக்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக, 30 கோடி ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.இந்த நிதி திரட்டும் பணியை, ரோட்டரி சங்கங்களை உள்ளடக்கிய ரோட்டரி அறக்கட்டளையினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே, முதல் தவணையாக, 11 கோடி ரூபாய், 2வது தவணையாக, 5 கோடி, ரோட்டரி அறக்கட்டளையினர் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, 3வது தவணையாக, 3.88 கோடி ரூபாய்க்கான நிதியை, ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், பொருளாளர் அருள்செல்வன், ரோட்டரி நிர்வாகிகள் சக்திவேல், தாமோதரன், டாக்டர். சுரேஷ் ஆகியோர், மாநகராட்சி கமிஷனர் பவன்குமாரிடம் வழங்கினர்.ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர். முருகநாதன் கூறியதாவது: 'கேன்சர்' பரிசோதனைக்கான நவீன மருத்துவ உபகரணமான 'லீனியர் ஆக்ஸிலேட்டர்' வாங்கவும், 'பங்கர்' கட்டவும், முதல் தவணை தொகை வழங்கினோம். 60 ஆயிரம் ச.அடியில் கட்டடம் கட்ட, இரண்டாவது தவணை நிதி வழங்கியிருந்தோம்.தற்போது, நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு, மூன்றாவது தவணை நிதி வழங்கியுள்ளோம். 'தமிழகத்தின் சிறந்த கேன்சர் சிகிச்சை மையமாக அமைய வேண்டும்' என்ற நோக்கில், உபகரணங்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்.இனி, 10 கோடி ரூபாய் வரை, மாநகராட்சிக்கு பங்களிப்பு நிதி தர வேண்டியுள்ளது. இதற்கு நன்கொடையாளர்கள் தாராளமாக முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ