உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மதுக்கூடம் வேண்டாமே!

மதுக்கூடம் வேண்டாமே!

அவிநாசி, சேவூர் ரோட்டில் சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அகற்ற வலியுறுத்தியும் தாலுகா அலுவலகம் முன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வன், தொழிலாளர் அணி துணை செயலாளர் மாணிக்கம், மகளிர் அணி துணைச் செயலாளர் ஜானகி உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மனமகிழ் மன்றத்தை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை