உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வினியோகம் நுகர்வோர் அமைப்பு மனு

குடிநீர் வினியோகம் நுகர்வோர் அமைப்பு மனு

திருப்பூர்;நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர், மாநகராட்சி அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு;திருப்பூர் மாநகராட்சி, 1வது மண்டலம், 23வது வார்டு, நாராயணசாமி நகர் குடியிருப்பு பகுதியில், பாலம் கட்டும் பணியின் போது, குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் வரும் நீர், சாக்கடையில் கலந்து வீணாகியது.அதிகாரிகளின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு சென்ற நிலையில் உடனடியாக குழாய் துண்டிப்பை சரிசெய்தனர்; இது பாராட்டுக்குரியது.அதேநேரம் அப்பகுதியில் மற்றொரு குழாய் உடைந்துள்ளது; சீரமைத்து தரும்படி, கடந்த, 3 நாட்களாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால், குடிநீர் வீணாகிறது; மக்கள் சிரமப்படுகின்றனர். நுகர்வோர் சட்டப்படி, குடிநீர் கட்டணம் செலுத்தும் நுகர்வோரின் தேவையை ஆறு நாட்களுக்கும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற நியதியை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ