உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மல்பெரி செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம்

மல்பெரி செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம்

உடுமலை;மல்பெரி செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டக்கலைத்துறை வாயிலாக மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இது குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி அறிக்கை: பட்டு உற்பத்தியில், உலகளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. தேசிய அளவில், பட்டு உற்பத்தியில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.உடுமலை வட்டாரத்தில், தற்போது பரவலாக மல்பெரி சாகுபடி செய்து, வெண்பட்டுக்கூடு உற்பத்தியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.மல்பெரி பயிர் சாகுபடியில் நீரை சேகரிக்கவும், தரமான இலைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதை விவசாயிகள் ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர்.தோட்டக்கலைத்துறை வாயிலாக, மல்பெரி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, மானியம் வழங்கப்படுகிறது.மல்பெரிக்கு, 4 அடி இடைவெளியில், பக்கவாட்டு குழாய்கள் அமைத்து, சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 54,342 ரூபாயும், இதர விவசாயிகளுக்கு 42,212 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள விவசாயிகள், உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது 9842950674, 7373391383, 8883610449 மற்றும் 9524727052 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை