உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண் மாணவியர் பயிற்சி

ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண் மாணவியர் பயிற்சி

உடுமலை;மடத்துக்குளம் வட்டாரத்தில், மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவியர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண்மையில் 'ட்ரோன்' தொழில் நுட்பம் குறித்து பயிற்சியளித்தனர்.மடத்துகுளம், காரத்தொழுவை சேர்ந்த பொண்ணுகுட்டி என்ற விவசாயி, சொந்தமாக ஆறு ட்ரோன்களை கொண்டு விவசாயத்தில் கடந்த, 3 ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.சமீப காலங்களில், விவசாயத் துறையில் 'ட்ரோன்' தொழில்நுட்பம் பெருகி வருகிறது. ட்ரோன்கள் வாயிலாக மருந்து தெளிக்கப்படும் போது, அதிகரித்த செயல்திறன், மேம்பட்ட விளைச்சல் மற்றும் குறைந்த செலவு என பல நன்மைகள் உள்ளன.வெங்காயம், தக்காளி, நெல், மக்காசோளம் போன்ற அனைத்து பயிர்களுக்கும் பூச்சிகொல்லி, பூஞ்சானக்கொல்லி, நானோ யூரியா ஆகியவற்றை தெளிப்பதற்காக 'ட்ரோன்' பயன்படுத்துகிறார். மேலும், மற்ற விவசாயிகளின் நிலத்திற்கு பூச்சிகொல்லி தெளிப்பதற்கும் பயன்படுத்துகிறார். ட்ரோன் பற்றிய விழிப்புணர்வையும் அதன் பயன்பாட்டு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ