உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர்:திருப்பூர், திருமுருகன்பூண்டியில் செயல்படும் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் நடந்த போதை பொருள் ஒழிப்பு மற்றும் மது அருந்துதலின் தீமை குறித்த 'விழிப்புணர்வு கிட்ஸ் மாரத்தான், 2024' போட்டி நடந்தது.திருமுருகநாத சுவாமி கோவில் மைதானத்தில் போட்டி துவங்கியது. பல்வேறு இடங்களில் இருந்து, 920 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். எஸ்.ஐ., விஜயகுமார், பூண்டி ரோட்டரி சங்க கார்த்திகேயன், திருப்பூர் எலாஸ்டிக் சங்க செயலாளர் சவுந்தர், நகராட்சி கவுன்சிலர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா நடந்தது. சுகன் சுகா மெடிக்கல் சென்டர் நிறுவனர் டாக்டர் சுந்தரன் வரவேற்றார். பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், தலைமை வகித்தார். 'சைமா' தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட்தை அந்தியூர் நகலுார் ஸ்போர்ட் கிளப் தட்டிச் சென்றது. சுகன் சுகா நிர்வாக இயக்குனர் கார்த்திகை சுந்தரம், நன்றி கூறினார்.---மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை