உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் பதிப்பால் சிதிலமடைந்தது ரோடு வாகனங்கள் செல்ல முடியாமல் திணறல்

குழாய் பதிப்பால் சிதிலமடைந்தது ரோடு வாகனங்கள் செல்ல முடியாமல் திணறல்

உடுமலை:உடுமலை நகரில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளால் ரோடு சிதிலமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.உடுமலை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கும், குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளும் நடக்கிறது. இதனால் ரோடு தோண்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றவுடன் மீண்டும் அவ்விடத்தை மண் குவித்து நிரப்புகின்றனர்.ஆனால் சீரமைப்பு பணிகளை, அரைகுறையாக மேற்கொள்வதால், பல பகுதிகளில் ரோடு மோசமடைந்து வருகிறது.உடுமலை நகரிலுள்ள யசோதா ராமலிங்கம் லே -அவுட் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்க குழிதோண்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குழாய் சீரமைக்கப்பட்டு ரோட்டில் மண் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் ரோட்டின் தரைதளம் வரை சமன் இல்லாமல் குழியாக உள்ளது. இதனால் ரோட்டின் குறுக்கே பள்ளமாகியுள்ளது.இரவு நேரங்களில், வாகன ஓட்டுநர்கள் பலமுறை இந்த ரோட்டில் செல்லும் போது, குழிகளில் வாகனத்தை விட்டு விபத்துக்குள்ளாகின்றனர்.சில நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் ரோட்டில் உள்ள பள்ளத்தால், கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வருவோர் மீதும் மோதுகின்றன. இதனால், பொதுமக்களும் நிம்மதியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ரோட்டை சமன்படுத்துவதற்கு, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை