உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி லேஸ் மதிப்பு உயரும் ஆடைகள்

ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி லேஸ் மதிப்பு உயரும் ஆடைகள்

திருப்பூர், : மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில், எம்ப்ராய்டரி லேஸ் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது.மதிப்புக்கூட்டப்பட்ட பின்ன லாடை ரகங்கள் தயாரிப்பைத் தான் ஏற்றுமதியாளர்களும், வர்த்தகர்களும் விரும்புகின்றனர். திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், மதிப்பு கூட்டிய ஆடை தயாரிப்புக்காக, கலப்பிழை துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மெட்டல் பொருட்கள், மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள் என, பல்வேறு பொருட்கள் புதிய டிசைனில் இடம்பெறுகின்றன.அந்தவரிசையில், பெண்கள், குழந்தைகள், சிறுமியருக்கான ஆடை உற்பத்தியில், ஆடையின் மதிப்பை உயர்த்துவதில், எம்ப்ராய்டரி லேஸ் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. பருத்தி நுாலிழைகளில் இருந்து தயாரிக்கப்படும் 'லேஸ்'கள், ஆடைகளுடன் இணைந்து வடிவமைத்து, சாயமிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெண்கள் ஆடைகளில் 'லேஸ்' பயன்பாடு தவிர்க்க முடியாதது. பொதுவாக, பின்னல் துணியை போலவே, 'கிரே' வண்ணத்தில் லேஸ் தயாரிக்கிறோம். ஆடை வடிவமைப்புக்கு தகுந்தபடி சாயமிடப்படுகிறது. எளிதாக, ஆடைகளில் வைத்து தைக்கும் வகையில் 'லேஸ்' தயாரிக்கப்படுகிறது.

- எம்ப்ராய்டரி லேஸ் தயாரிப்பாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !