உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி போதும்... மாநகராட்சி வேண்டாம்! ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கறார்

நகராட்சி போதும்... மாநகராட்சி வேண்டாம்! ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கறார்

அவிநாசி:'பழங்கரை ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம். அவிநாசி நகராட்சியுடன் இணைப்பதையே விரும்புகிறோம்,' என ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில், கவுன்சிலர் பேசினார்.அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. சேர்மன் ஜெகதீசன் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ரமேஷ், விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் பேசியதாவது:முத்துசாமி- (மா.கம்யூ.,): வஞ்சிபாளையம் - பொன் ராமபுரத்தில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், காவலாளிக்கு மாதம், 9,300 சம்பளம் கொடுப்பதாக ஊராட்சி நிர்வாகம் ரசீது போட்டு பணத்தை எடுத்துள்ளனர்.இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். எஸ்.கே., புதுார் பகுதி மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அய்யம்பாளையம் ஊராட்சியில், உயிரிழந்த டேங்க் ஆபரேட்டர் சின்னரங்கன் குடும்பத்துக்கு, அரசு சலுகைகள் தற்போதுவரை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதுமாதவன் (தி.மு.க.,):குளத்துப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் புதியதாககட்டித் தர வேண்டும். பெரியாயிபாளையம் பகுதியில், காலை உணவு திட்டத்துக்கு சமையல்கூட அறை கட்ட வேண்டும். பழங்கரை ஊராட்சி பகுதியில் கால்நடை மருத்துவமனை புதிதாக அமைத்து தர வேண்டும்.கார்த்திகேயன் -(தி.மு.க.,):பழங்கரை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. பேரூராட்சியாக தரம் உயர்த்தி தர வேண்டும். அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தும் போது பழங்கரையை அதனுடன் இணைக்க வேண்டும்.ரங்கா நகர் பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும். விஸ்வாஸ் அவென்யூ பகுதி மக்கள் பயன்படுத்தும் சாக்கடை நீரை சிவசக்தி நகர் பகுதிக்குள் விடுவதால் பெரும் நோய் தொற்றுகள் ஏற்பட்டு வருகிறது.அய்யாவு (அ.தி.மு.க.,): சாலை பாளையத்தில் உள்ள தடுப்பணை பழு தடைந்துள்ளது. விரைவாக சீரமைத்து தர வேண்டும். நல்லகட்டிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில், ஏ.டி., காலனிக்கு செல்லும் பாதைக்கு கான்கிரீட் போட வேண்டும். குப்பாண்டம்பாளையத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டித்தர வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசியபின், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை