உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மராத்தான் போட்டி

அனுப்பர்பாளையம்;பெருமாநல்லுார், கே.எம்.சி., சட்டக்கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது. கூடுதல் எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சட்டக்கல்லுாரி முன் தொடங்கி விவசாயிகள் நினைவு ஸ்துாபி, பெருமாநல்லுார் நால் ரோடு, கணக்கம் பாளையம் பிரிவு வழியாக மீண்டும் கல்லுாரி வரை மராத்தான் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி தலைவர் சண்முகம், தாளாளர் லோகநாயகி மற்றும் அருணா ஸ்ரீதேவி, ஆகியோர் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பேசினர். கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.........படம் 'கிராப்' செய்து வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை