உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாராகிய பஸ் ஸ்டாப் நிழற்கூரை ஊராட்சியும் கண்டுகொள்ளவில்லை

பாராகிய பஸ் ஸ்டாப் நிழற்கூரை ஊராட்சியும் கண்டுகொள்ளவில்லை

உடுமலை;உடுமலை, குறிச்சிக்கோட்டையில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை, மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.குறிச்சிக்கோட்டையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை நீண்ட காலமாகவே இடிந்து, சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், பயணியர் அதை பயன்படுத்துவதில்லை. இதனால், திறந்த வெளியில் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.இருப்பினும், மழை, வெயில் காலத்திலும், நிழற்கூரையை பயன்படுத்த முடியாத வகையில், மது பாட்டில்களும், சிகரெட் குப்பையுமாக துர்நாற்றத்தை பரப்புகின்றன.சிறிது நேரமும் நிழற்கூரையில் நிற்க முடியாதபடி, பயணியரை முகம் சுழிக்க வைப்பதை போல, மது அருந்திய டம்ளர்கள் குவிந்தும் அசுத்தமாகவும் உள்ளன.பயன்பாடில்லாமல் உள்ள நிழற்கூரை மாலை நேரங்களில் மது அருந்தவும், சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும், பயன்படுத்தப்படுகிறது. இரவில், அவ்விடத்தில் காத்திருக்கவும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்திலும் 'குடி'மகன்கள் சிறிதும் பயமின்றி, நிழற்கூரையை அசுத்தமாக்குகின்றனர். ஊராட்சி நிர்வாகமும், இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களை வேதனைக்குள்ளாக்குகிறது.இதுதவிர, அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அருகிலுள்ள நிழற்கூரையிலும், 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். பயணியர் பயன்படுத்துவதற்கான இடத்தை, 'பாராக' மாற்றியிருப்பது அப்பகுதியினரை வேதனைக்குள்ளாக்குகிறது.இதுகுறித்து, குறிச்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !