உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

திருப்பூர்:தாராபுரம் பகுதியில் விவசாயிகள் போர்வையில், நீர்நிலைகளில் இரவு, பகலாக கிராவல் மண்ணைச் சுரண்டியெடுத்து, கடத்தல் கும்பல் விற்பனை செய்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 276 நீர் நிலைகளில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க, விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அங்கு வண்டல், களிமண் போன்றவை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.வண்டல் மண் பெயரில்கிராவல் மண்ணை சுரண்டியெடுத்து கடத்தும் பணியில், விவசாயிகள் போர்வையில், கடத்தல் கும்பல் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.தாராபுரம், கெத்தல் ரேவ், தேர்பாதை, ரங்கம்பாளையம் போன்ற இடங்களில் உள்ள குளங்களில் போலி அனுமதி ரசீதுகளை வைத்து இரவு, பகலாக கிராவல் மண் கடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !