உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆசிரியரிடம் பணம் பறிப்பு

ஆசிரியரிடம் பணம் பறிப்பு

திருப்பூர்;திருப்பூரில், தனியார் பள்ளி ஆசிரியையிடம் பணம், மொபைல் போனை பறித்த, இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், முத்தணம்பாளையம், பொன்முத்து நகரை சேர்ந்தவர் சந்திரகுமாரி, 36; தனியார் பள்ளி ஆசிரியை.இவர் பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். இவரை வழிமறித்த, இருவர் கத்தி முனையில், அவரின் கைப்பையை பறித்து சென்றனர். அதில், பணம், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு ஆகியன இருந்தது. புகாரின் பேரில் நல்லுார் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, செவந்தாம்பாளையத்தை சேர்ந்த ஆதிசக்தி மணி, 22 மற்றும் வினோத்குமார், 29 என, இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ