உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயி கொலை; மூவர் கைது

விவசாயி கொலை; மூவர் கைது

திருப்பூர் : குண்டடம், நல்லுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 58; விவசாயி. நேற்று முன்தினம் பழனிசாமியின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த சண்முகம், 35, தனது தோட்டத்தில் இருந்த குப்பையை, பழனிசாமியின் தோட்டத்தில் போட்டார்.இதுதொடர்பாக, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த சண்முகத்தின் தந்தை குப்புசாமி மற்றும் தாய் வள்ளியாத்தாள் ஆகியோரும் பழனிசாமியுடன் தகராறில் ஈடுபட்டனர். அதில், பழனிசாமியை தாக்கி கீழே தள்ளினர். சிறிது நேரத்தில் பழனிசாமி இறந்தார்.குண்டடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சண்முகம், குப்புசாமி, வள்ளியம்மாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை