உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் நினைவிடத்தில் விவசாய சங்கத்தினர் அஞ்சலி

விவசாயிகள் நினைவிடத்தில் விவசாய சங்கத்தினர் அஞ்சலி

பல்லடம்;பல்லடம் அருகே விவசாயிகளின் நினைவிடத்தில், பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்த, 1972ம் ஆண்டு, மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த சுப்பையன், முத்துக்குமாரசுவாமி நினைவாக, கே. அம்யம்பாளையத்திதல், நினைவு ஸ்துாபி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், நேற்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், செயல் தலைவர் வெற்றி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, விவசாய தியாகிகளுடன் குடும்பத்தினர் பொங்கல் வைத்து படையலிட்டு அஞ்சலி செலுத்தினர். * உழவர் உழைப்யாளர் கட்சி சார்பில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். * தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில, ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார், துணை செயலாளர் வெங்கடாசலம் உட்பட பலரும் பங்கேற்றனர். * நொய்யல் விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் தலைமையில் வந்த விவசாயிகள், அஞ்சலி செலுத்தினர். * கொ.ம.தே.க. சார்பில், அதன் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்கள், மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல், பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பிலும், விவசாயிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ---விவசாயிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை