உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நிலம் அபகரிக்க முயற்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;இனாம் நிலங்களை, கோவில் நிலங்கள் என கூறி அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த சில ஆண்டுகளில் குத்தகையாளர்களாக மாற்றப்பட்ட அனைத்து விவசாயிகளின் குத்தகைகளையும் ரத்து செய்திட வேண்டும். இனாம் கழிப்பின் போது பட்டா பெற்று அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமைகளை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்துவதன் மூலமும் பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமும் பறிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், காங்கயம் சிவன்மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் முத்துவிஸ்வநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ