உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலங்களில் கோடை உழவு விவசாயிகள் தீவிரம்

நிலங்களில் கோடை உழவு விவசாயிகள் தீவிரம்

உடுமலை;தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, உடுமலை பகுதி விவசாயிகள் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை வட்டாரத்தில், விவசாய சாகுபடிக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் ஆதாரமாக உள்ளது. கோடை மழை சீசனிலும் கணிசமான மழைப்பொழிவு இப்பகுதியில் உள்ளது.கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சிக்கு கோடை கால மழை கைகொடுத்த நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கும் என எதிர்பார்க்கின்றனர்.எனவே, விளைநிலங்களில், சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கோடை உழவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.'தற்போது கோடை உழவு செய்வதால், தென்மேற்கு பருவமழையில் கிடைக்கும் மழை நீர் மண்ணில் நல்ல ஆழமாக செல்லும். வரும் ஆடிப்பட்டத்தின் போது மானாவாரி மற்றும் இறவை பாசன சாகுபடிக்கு தற்போதைய உழவு கைகொடுக்கும்,' என விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ