உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர்நிலைகளை பாதுகாக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:வீரபாண்டி பகுதியில் குளம், குட்டைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் கலெக்டர் அலு வலகம் முன்பாக, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி, வீரபாண்டி பகுதியில், சட்டவிரோதமாக இயங்கும் சாய ஆலைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி பேசுகையில், ''கடந்த சில தினங்களுக்கு முன், சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் விடுவதாக புகார் வந்தது. நேரில் பார்க்க சென்றபோது, வீரபாண்டி போலீசில் பொய்யான புகார் அளித்தனர். அதன் காரணமாக, நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி