உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் தவிப்பு

மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் தவிப்பு

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையம், செங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் குருசாமி, 43. இவரது தோட்டத்தில் இருந்த கிணற்று மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர், 30 மீட்டரை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.இதே போல சேமலைக்கவுண்டம்பாளையம் தேவி தோட்டம் தங்கவேல், 42 என்பவர் தோட்டத்தில், 50 மீட்டர் ஒயர், அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாங்க அய்யர் தோட்டத்தைச் சேர்ந்த சேகர், 47 என்பவரது தோட்டத்தில் இருந்த 7 மீட்டர் ஒயர் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று விட்டனர்.இதனால், விவசாயிகள் மின் மோட்டாரை இயக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஒயர் திருட்டு குறித்து விவசாயிகள் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு அடிக்கடி மின் மோட்டார் ஒயர் திருட்டு போவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே போலீசார், உடனடியாக திருடர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ