உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்பந்து ; சாதித்த பள்ளிகள்

கால்பந்து ; சாதித்த பள்ளிகள்

திருப்பூர்:திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில், தெற்கு குறுமைய மாணவர், மாணவியர் கால்பந்து போட்டி நேற்று நடந்தது.மாணவர், 14 வயது பிரிவில், பிளாட்டோஸ் அகாடமி அணி, 2 - 0 என்ற கோல்கணக்கில், செயின்ட் ஜோசப் பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், செயின்ட் ஜோசப் பள்ளி அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில், கதிரவன் பள்ளி அணியையும், 17 வயது பிரிவில், சென்சுரி பள்ளி அணி, 2 - 0 என்ற கோல் கணக்கில், செயின்ட் ஜோசப் பள்ளி அணியையும் வென்றது.

மாணவியர் பிரிவு

பதினான்கு வயது பிரிவில், விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணி, காந்தி வித்யாலயா பள்ளி அணியை, 2 - 0 என்ற கோல்கணக்கில் வென்றது.17 வயது பிரிவில் சென்சுரி பள்ளி அணி, ஆஷாத் பள்ளி அணியை, 2 - 0 என்ற கோல் கணக்கிலும், 19 வயது பிரிவில், விவேகானந்தா வித்யாலயா அணி, பிரன்ட்லைன் பள்ளி அணியை, 1 - 0 என்ற கோல் கணக்கிலும் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை