உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பூர் : அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் - 1 தேர்வு, வரும் ஜூலை 13ல் நடக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் போன்ற 90 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்படுகிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 1, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாளை முதல் (31ம் தேதி) துவங்குகிறது. இப்பயிற்சியில், மாதம் இருமுறை மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், 0421 2999152, 94990 55944 ஆகிய எண்களில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை