உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச கண் சிகிச்சை முகாம்; 11 பேருக்கு அறுவை சிகிச்சை

இலவச கண் சிகிச்சை முகாம்; 11 பேருக்கு அறுவை சிகிச்சை

பல்லடம்: பல்லடம் லயன்ஸ் சங்கம், புளியம்பட்டி ஊராட்சி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் புளியம்பட்டி கிராமத்தில் நடந்தது. லயன்ஸ் சங்க மாவட்டத் துணை ஆளுநர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் உத்தமராஜ், பல்லடம் லயன்ஸ் சங்க தலைவர் ராமபிரபு, செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், விஷ்ணுவர்தன், பொருளாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, ஊராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இலவச கண் சிகிச்சை முகாமில், 11 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அறுவை சிகிச்சை முடிந்த பயனாளிகளுக்கு, பழம், பிரெட், பிஸ்கட் உள்ளிட்டவற்றை ஈகை அறக்கட்டளை வழங்கியது. பல்லடம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, லயன்ஸ் சங்கம் சார்பில், மருந்துகள் வைப்பதற்கான, 3 மர கேக்குகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ