உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீமைக் கருவேல் மரங்கள் அகற்றம் பனை காக்கும் நண்பர்கள் சேவை

சீமைக் கருவேல் மரங்கள் அகற்றம் பனை காக்கும் நண்பர்கள் சேவை

அவிநாசி'கவுசிகா தடுப்பணையில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணியில் பனை காக்கும் நண்பர்கள் திருப்பூர் குழுவினரும், என்.சி.சி., மாணவர்களும் ஈடுபட்டனர்.அவிநாசி வட்டம், வஞ்சிபாளையம் பகுதியில் கவுசிகா தடுப்பணையில் களப்பணி மற்றும் சீமை கருவேல் மரங்கள் அகற்றும் பணியை என்.சி.சி., மாணவர்களுடன் இணைந்து பனைகாக்கும் நண்பர்கள் திருப்பூர் குழுவினர் மேற்கொண்டனர். இக்குழுவினர், இதுவரை 32க்கும் அதிகமான குட்டைகள், குளக்கரைகளில் 1.6 லட்சம் பனை விதைகளை விதைத்துள்ளனர். நேற்று வரை 160 வாரங்களாக தொடர்ந்து நீர்நிலைகள், நீர் வரத்து பாதைகள், தடுப்பணைகள் ஆகியவற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் அகற்றும் பணியை என்.சி.சி., மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இந்த களப்பணியை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும், விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் 9894046478 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை